Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்ட “மன்மத லீலை”…. டிவிட்டரில் அறிக்கை வெளியிட்ட அசோக் செல்வன்…!!!

மன்மத லீலை திரைப்படம் தாமதமானது குறித்து அசோக் செல்வன் அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

“மன்மத லீலை” திரைப்படமானது வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், பிரியா சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஸ்னீக்  பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டு இருந்தார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்றது. இந்த பிரச்சனையால் படத்தை காலையில் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு பிற்பகலுக்கு பிறகு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

இதுகுறித்து இந்த படத்தின் கதாநாயகன் நடிகர் அசோக் செல்வன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,” மக்களே நட்புக்களே! மன்மத லீலை படம் பார்க்க இன்று காலையில் ஆவலுடன் திரையரங்கிற்கு சென்றிருப்பீர்கள். படம் திரையிடபடாததால் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள். இது எனக்கும் பெரிய ஏமாற்றமே. பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள்ளது. டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகியுள்ளது. படத்தை பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எப்பவும்போல இப்பவும் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்குது. சவால்களை கடந்த பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் இனிமையானது” என அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |