Categories
மாநில செய்திகள்

“தாமதமாக வழங்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்”….. மக்கள் நிதி மய்யம் டுவிட் பதிவு….!!!

மதுரை ஐகோர்ட் சமீபத்தில் வழக்குகள் விசாரணைக்கு வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யக்கூடிய வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதனை மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், “ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை கோர்ட் அமல்படுத்தியுள்ளது. இது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.

அதனை தொடர்ந்து விசாரணை நடைபெறும் தேதி, நேரம் ,வாதிட முன்வைக்கும் சான்றிதழ், வழக்குகளின் விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பது வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல வழக்கு தொடுபவர்கள், எதிர்பார்ப்பினர் என அனைவருக்குமே பயனளிக்கும். அதிலும் பெண்கள், முதியோர் சிரமத்தை குறைக்கும். இந்திய கோர்ட்டுகளில் அனைத்திலுமே இந்த நடைமுறையை தாராளமாகப் பின்பற்றலாம். தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நிதிக்கு சமம் என்பார்கள்.பல லட்சம் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலவையில் உள்ள நிலையில், இதுபோன்ற மாற்றங்கள் நிதி துறையில் வரவேற்கத்தக்கது” என்று அதில் பதிவிட்டுள்ளது.

Categories

Tech |