நடிகை சுருதிஹாசன் தெலுங்கில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி போன்றோருடனும், பிரபாசுடன் சலார் ஆகிய 3 திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பால கிருஷ்ணா திரைப்படத்துக்கு தற்காலிகமாக “என் பி கே 107” என பெயர் வைத்துள்ளனர். சிரஞ்சீவி படம் ரவீந்த்ரா என்ற பாபி இயக்கத்தில் வால்தேர் வீரய்யா எனும் பெயரில் தயாராகிறது. இதில் பால கிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த 2 திரைப்படங்களிலும் சுருதிஹாசன் தான் கதாநாயகியாக இருக்கிறார்.
இந்த இரண்டு படங்களின் இடையில் எந்த படத்தை முதலில் ரீலீஸ் செய்வது என்பதில் போட்டி இருக்கிறது. ரிலீஸ் செய்வது ஒரு புறம் இருக்க இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு சுருதிஹாசனால் தாமதமாகி இருக்கிறது என்கின்றனர். 2 படங்களுக்கும் ஒரே நேரத்தில் தேதிகளை ஒதுக்க முடியாமல் சுருதிஹாசன் திணறி வருவதாக கூறப்படுகிறது. பிரபாசின் சலார் திரைப்படத்திலும் சுருதிஹாசன் தான் கதாநாயகி ஆவார். இப்போது அவர் சலார் திரைப்படத்தின் படப் பிடிப்பில் தான் பிசியாக இருக்கிறார். ஆகவே சுருதிஹாசனின் கால்சீட்டுக்காக பாலகிருஷ்ணாவும், சிரஞ்சீவியும் தவம் கிடப்பதாக கூறுகின்றனர்.