திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து மீண்டும் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முரசொலியில் “கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் ஆளுநரின் குடியரசு தின வாழ்த்து செய்தியை மையமாக வைத்து கடுமையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில் ‘தனக்கு இருக்கும் கடமையை செய்யாமல் ,அவசியமற்ற அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். யாரோ சிலர் தவறாக வழி நடத்துகிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதி ஆகும். அதை தெரிந்தும் புரிந்தும் செயல்படவேண்டும்’ என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.