Categories
மாநில செய்திகள்

தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளம்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனைப்போலவே குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் புரண்டு ஓடுகிறது.

Categories

Tech |