கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் இந்த கனமழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி உபரிநீர், சிற்றாறு அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories