Categories
மாநில செய்திகள்

தாமிரபரணி பெயர் மாற்றம்…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

பொருநை அல்லது தன்பொருனை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இவ்வாறு நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து, வேளாண்மைக்கும் பயன்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதிகை மலையில் தோன்றி திருச்செந்தூர் அருகே கடலில் கலக்கும் தாமிரபரணியின் முறையான தமிழ்ப்பெயர் பொருநை நதி. தமிழ் நாகரிகத்தின் பல வரலாற்று சுவடுகள் இந்த நதிக்கரையில்தான் கிடைக்கின்றன. இந்நதியின் பெயரை மீண்டும் பொருநை என்று மாற்ற வேண்டும் என பொன் காந்திமதிநாதன் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதற்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |