Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தாம்பரம் டு கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைக மாற்றம்”… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தாம்பரம் கடற்கரை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் 27-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

மேலும் தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 10.40 மணி, 11.15 மணி மற்றும் 11.35 மணிக்கும், மறுமார்க்கமாக கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.30 மணி, 11.40 மணி, 11.59 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |