நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், தாம்பரம் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.அதன்படி தாம்பரம் மட்டும் நெல்லை இடையே பண்டிகை கால சிறப்பு முறையில் இன்று இரவு 9 மணிக்கு இயக்கப்படுகிறது.நெல்லை மற்றும் சென்னை எழும்பூர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி மதியம் ஒரு மணிக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.