நடிகர் சிம்பு மீண்டும் பத்து தல படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த சிம்பு தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் படப்பிடிப்பிலிருந்து விலகி தந்தையுடன் இருந்து வந்தார். மேலும் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து சிம்புவின் தந்தையான டி.ஆர் பூரண குணமடைந்து சென்னை திரும்பியுள்ளார். சிம்புவும் சென்னை வந்தடைந்துள்ளார். இந்த நிலையில் சென்னை வந்த சிம்பு மீண்டும் பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கின்றார். தற்பொழுது படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. சிம்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.