ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய ஜோகோவிச்சை வரவேற்கும் விதமாக செர்பிய அரசு தங்கள் நாட்டு தேசிய கொடியின் வண்ணத்தினால் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை ஒளிரூட்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் அந்நாட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜோகோவிச்சை ஆஸ்திரேலிய படைவீரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.
இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் தனிமையிலிருந்த ஜோகோவிச் தற்போது தனது தாயகமான செர்பியாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் செர்பிய அரசு ஜோகோவிச்சை தங்கள் நாட்டின் தேசிய கொடி வண்ணத்தில் LED விளக்குகளால் பெரிய கட்டிடம் ஒன்றை ஒளிரூட்டி வரவேற்றுள்ளது.