ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது’ என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
அந்த வகையில், இந்தியாவும் அங்குள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர், அதிகாரிகளை இந்தியாவுக்கு திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர், அதிகாரிகளை இந்தியாவுக்கு திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.