Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில்… பங்குனி திருவிழா… கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடக்கம் ..!!

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் மார்ச் மாதம் 23-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகங்கை இளையான்குடி அருகே சிறப்பு வாய்ந்த தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இந்த கோவிலில் வருடந்தோறும் 10 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சென்ற வருடம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில் விழா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் வருகின்ற 23-ஆம் தேதி விழா தொடங்கி ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. விழாவில் காமதேனு வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்த கோவிலில் வருகின்ற 31-ஆம் தேதி அலங்காரத்துடன் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இரண்டாம் தேதி அன்று விழா நிறைவு பெறுகிறது. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காரைக்குடி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் வெங்கடேசன் செட்டியார் தலைமையில் செய்து வருகின்றனர்.

Categories

Tech |