Categories
மாநில செய்திகள்

தாயாக…. மனைவியாக…. மகளாக…. சமூகத்தை தங்கி நிற்பவள் பெண் – ஸ்டாலின் டுவிட்…!!

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெண்ணும் தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் நம்முடைய உறவின் அனைத்து பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகிறாள். பெண் இல்லையேல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை. மேலும் ஒவ்வொரு கணவனின் வெற்றிக்குப் பின்னும், அண்ணனின் வெற்றிக்கு பின்னும் தந்தையின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். இவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் பெண் என்பதால் தான் ஒவ்வொரு நாடுகளுக்கும், நதிகளுக்கும், மலைகளுக்கும் பெண்கள் பெயர் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண் பெண்கள் பெருமை வாய்ந்தவர்கள். பெண்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.

உடலளவில் ஆண்கள் வலிமையானவர்கள் என்றாலும் பெண்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் என்றால் ஆசிரியர் அல்லது செவிலியராக தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை மாறி தற்போது விமானம் ஓட்டுவது, ரயில் ஓடுவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, இராணுவம், கப்பல் துறையில் வேலை பார்ப்பது என அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டனர். இந்நிலையில் பெண்களைப் போற்றும் விதமாக இன்று பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தாயாக மனைவியாக சகோதரியாக மகளாக சமூகத்தை தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |