கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜன் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் செல்வராஜனை கைது செய்தனர். செல்வராஜன் ஏற்கனவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் செல்வராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.