Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் கதறி அழுத சிறுமி…. 55 வயது கூலி தொழிலாளியின் செயல்…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் குழாயில் குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் 55 வயதுடைய கூலி தொழிலாளி தகாத முறையில் பேசி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதெல்லாம் தொழிலாளி சிறுமியை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.

Categories

Tech |