10-வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் காமாட்சி நகரில் பானு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பானு தனது தாயாரிடம் பேசாமல் நேராக அறைக்குள் சென்று கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுள்ளார். இதனை அடுத்து நீண்ட நேரமாகியும் பானு அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது பாணு தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அவரது தாயார் கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாணு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.