Categories
உலக செய்திகள்

தாயின்றி தவித்த குருவி குஞ்சுகள்… பாசத்துடன் பராமரிக்கும் நாய்….!!

தாயை இழந்த குருவி குஞ்சுகளை நாயொன்று பாதுகாத்து நட்புடன் பழகி வரும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

இங்கிலாந்தில் உள்ள நார்போல்ட் என்ற இடத்தில் ஜெடேன் என்பவர் ஐந்து வயதில் ரூபி என்ற லேப்ரடார் வகை நாயை வளர்த்து வருகிறார். அவர் வீட்டு தோட்டத்தில் கூடு கட்டியிருந்த குருவி ஒன்று இறந்துவிடவே அதன் குஞ்சிகள் தாயின்றி தவித்து வந்துள்ளது. அவற்றின் மீது இரக்கம் கொண்ட ஜெடேன் அந்த குருவிக்குஞ்சிகளை அவர் வீட்டினுள் பாதுகாத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் வளர்ப்பு நாயான ரூபி அந்த குருவிக்குஞ்சுகளிடம் அளவுகடந்த அன்பைசெலுத்தி நட்பு பாராட்டி வருகிறது. ஒரு நாய் குருவி குஞ்சுகளை பாசத்துடன் அரவணைத்து நட்பு பாராட்டி வரும் காணொளி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |