Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயின் உடல் அருகே அமர்ந்து அழுத மகள்…. திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தாய் இறந்த துக்கத்தில் மகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான வேலம்மாள்(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பகவதி அம்மாள்(57) என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் உடல் நல குறைவு காரணமாக வேலம்மாள் உயிரிழந்து விட்டார். நேற்று மதியம் அவரது இறுதி சடங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் தாயின் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த பகவதி அம்மாள் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பகவதி அம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வேலம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் பகவதி அம்மாளின் மகன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் அவர் வந்த பிறகு உடல் தகுணம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |