Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாயின் கடைசி ஆசை….! நிறைவேற்றி வைத்த மகள்கள்….. பெரும் நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தங்களது தாயின் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் அவரது மகள்கள்.

திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அச்சகத்தொழில் நடத்தி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனா சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார் .

மீனா சமூக சிந்தனையும், முற்போக்கு கருத்துகளையும் கொண்டிருந்தவர். தனது மரணத்திற்கு பிறகு தனது உடலை எரிக்கவோ புதைக்கவோ கூடாது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் தானமாக கொடுக்க வேண்டும் என்று தனது மகள்களிடம் கூறியிருந்தார். இந்நிலையில் சிறுநீரக பிரச்சனையால் உயிரிழந்த அவரின் உடலை மகள்கள் தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் விதமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக  கொடுத்துள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றிய மகள்களின் இந்த செயல் பெறும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |