Categories
தேசிய செய்திகள்

“தாயின் கவனக்குறைவு” நாட்டு சர்க்கரைக்கு பதில் எலி மருந்து…. 2 குழந்தைகள் பலியான சோகம்…!!!

கவனக்குறைவால் பாலில் எலி மருந்து கலந்து கொடுத்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரியா. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியா சம்பவத்தன்று நாட்டு சக்கரைக்கு பதிலாக கவனக்குறைவால் எலி மருந்தை எடுத்து கலந்து பாலை காய்ச்சி தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இதனை குடித்த இரண்டு குழந்தைகளும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு போய் அனுமதித்துள்ளனர்.

ஆனால் குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தாய் பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உண்மையில் கவனக்குறைவால் நடந்ததா? என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |