Categories
சினிமா தமிழ் சினிமா

தாயின் காலில் விழுந்து…. நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி…!!

சிவகார்த்திகேயன் தனது தாயின் காலில் விழுந்து கலைமாமணி விருதை சமர்ப்பித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய தாயின் காலில் விழுந்து கலைமாமணி விருதை அவருக்கு சமர்ப்பணம் செய்துத் செய்துள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “சாமானியனையும் சாதனையாளனாக மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருது அளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் மிக்க நன்றி.

தந்தையை இழந்து நிர்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரை சேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்” என்று நிகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தன்னுடைய தாயின் காலில் விழுந்து அவருக்கு சமர்ப்பணம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |