சென்னையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அச்சப்படாமல் சிலர் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு எந்த நிமிடத்திலும் பாதிப்பு வரலாம் என்று அச்சத்தில் உள்ளனர். இவ்வாறான சூழலில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மடிப்பாக்கத்தில் 15 வயது பாலியல் வன்கொடுமை செய்வதற்கு தாய் உடந்தையாக இருந்துள்ளார். சிறுமியின் தாயார் சேகர் என்பவருடன் தவறான உறவை வைத்து வந்துள்ளார். அடிக்கடி வீட்டிற்கு வந்த சேகர், சிறுமியை தாய் அனுமதியுடன் பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். அதனால் கர்ப்பம் அடைந்த சிறுமி தற்போது குழந்தை பெற்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தமிழகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.