லாரி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே வைத்தியநாதபுரம் பகுதியில் ரத்தின சுயம்பு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்ம சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்ம சூர்யாவுக்கும் அவருடைய தாயாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த பத்ம சூர்யா வீட்டின் அருகே இருக்கும் தோட்டத்தில் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பத்ம சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பத்ம சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டார் காவல்நிலையத்தில் ரத்தின சுயம்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.