Categories
தேசிய செய்திகள்

தாயுடன் சண்டை…. வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி…. அடுத்தடுத்து காத்திருந்த கொடூரம்…!!!

தாயுடன் ஏற்பட்ட சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 15 வயது மகள் உள்ளார். இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் புனேவில் குடி பெயர்ந்துள்ளனர். சம்பவத்தன்று தாய்க்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர், மற்றும் பேருந்து நிலையத்தில் ஒருவரும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்கள்.

இதனையடுத்து இரண்டு நபர்கள் அந்த சிறுமியை கடத்தி கொண்டு சென்று கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரை ஏற்று காவல்துறையினர் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்ததுடன் தலைமறைவாக உள்ள மற்ற இரண்டு பேரையும் தேடி வருகின்றனர்.

Categories

Tech |