Categories
உலக செய்திகள்

தாயுடன் சென்ற சிறுமி… திடீரென்று மர்மநபர் செய்த வேலை… காவல்துறையினர் வெளியிட்ட சிசிடிவி காட்சிகள்…!!

தெற்கு லண்டனில் தன் தாயுடன் சென்றுகொண்டிருந்த 7 வயது சிறுமியை கடத்தமுயன்ற நபர் குறித்த அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

தெற்கு லண்டனில் CamberWell  என்ற பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தாயாருடன் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று அச்சிறுமியை தூக்கிக் கொண்டு ஓடியுள்ளார். அதன் பிறகு அச்சிறுமியை விட்டுவிட்டு மாயமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது காவல்துறையினர்  இது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அந்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது இச்சம்பவம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நடந்தது. அப்போது பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்கள் குறித்த ரகசியங்கள் காக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.

மேலும் சமூக இணையதளத்தின் வாயிலாகவும் பொது மக்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அந்த மர்ம நபர் நாற்பது வயது மதிக்கத்தக்கவர் என்றும் கருப்பினத்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரின் உயரம் 5’6 என்றும் காவல்துறையில் தற்போது தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |