தாயை இழந்த சிறுமி சித்தியால் கொடுமை செய்யபட்டதால் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் தாயை இழந்த சிறுமி , எஸ் எஸ் காலணியில் வசித்து வரும் அவளது சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சித்தி அவளை மிகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் , மனிதாபிமானம் இல்லாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார் . இக்கொடுமையிணை தாங்க முடியாத சிறுமி புத்திசாலித்தனமாக எஸ் எஸ் காலணியில் உள்ள குழந்தைகள் நல வாரியத்தில் புகார் அளித்தார் . அப்புகாரை ஏற்று குழந்தைகள் நல்ல வாரிய குழு உறுப்பினர் பாண்டியராஜன் சிறுமியின் சித்தி செய்த கொடுமையைப் பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்திருக்கிறார்.
அதில் சிறுமி கூறியதனைத்தும் உண்மை என தெரிய வந்த நிலையில் பாண்டியராஜன் எஸ் எஸ் காலணியின் காவல் நிலையத்தில் சிறுமியின் சித்தியை குறித்து புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சித்தியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுமி தன்னை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டதையடுத்து , அவளை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.