ஜார்கண்ட் மாநிலத்தில் தாயை எரித்துக் கொன்று அந்த நெருப்பில் கோழியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் தாயே எரித்து கொலை செய்து அந்த நெருப்பில் கோழியை சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதான் சோயா என்பவர் குடிபோதையில் தாயை அடித்துக் கொன்று, உடலை வீட்டின் வாசலில் எரித்து, அதன் பிறகு அந்த நெருப்பில் கோழியை சமைத்து சாப்பிட்டுள்ளார். மகன் குடிபோதையில் வந்ததால் தாய் கடுமையாக அவரை கண்டித்து திட்டியுள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அவர் குடி போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தாயை அடித்துக் கொன்று வாசலில் உடலைப் போட்டு எரித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.