Categories
தேசிய செய்திகள்

தாயை கற்பழிக்க முயன்ற நபர்… சிறுமிகள் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆயிரம் கொல்லி என்ற பகுதியில் முகம்மது என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி சில மாதமாக படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் முதல் மனைவியை கவனித்து கொள்ள நிலம்பூர் என்ற இடத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்து வந்தார். இந்தப் பெண்மணிக்கு 13 வயது மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் தன் தாயுடன் தங்கியிருந்தனர். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென வெளியூர் செல்ல நேர்ந்தது. அப்போது காலை 10 மணியளவில் முகமது வேலைக்கு பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்யும் முயன்றார். இதனை அறிந்த பெண்மணியின் இரண்டு மகள்களும் தடுக்க முயன்றபோது முகம்மது அவர்களை நடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இரண்டு சிறுமிகளும் அங்கிருந்த கோடாரியை எடுத்து முகமதுவின் தலையில் ஓங்கி இரண்டு முறை அடித்தனர். இதில் முகமது ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்தார். மேலும் முகமது காலை சிறுமிகள் வெட்டி துண்டாக்கினர். இதையடுத்து தாய் மற்றும் சிறுமிகள் மூவரும் சேர்ந்து ஒரு சாக்குமூட்டையில் முகமது உடலை கட்டி ஒரு குழிக்குள் போட்டு மறைத்து வைத்தனர். அதன் பிறகு 2 சிறுமிகளும் சுல்தான் பத்தேரி காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தவர்களை . இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முகமது உடலை மீட்டு சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தாயை கைது செய்து, 2 சிறுமிகளையும் போலீசார் அங்கு உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |