Categories
உலக செய்திகள்

தாயை காண ஓடி வந்த மகள்.. இறுதிச்சடங்கில் கூட கலந்துகொள்ள முடியாத பரிதாபம்.. என்ன காரணம்..?

பிரிட்டனில் பெண் ஒருவர் துபாயிலிருந்து வந்ததால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த 35 வயதுள்ள பெண் Mary Garvey. இவர் கடந்த நான்கு வருடங்களாக துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாய் திடீரென்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பதாய் அறிந்தவுடன் Mary பிரிட்டனிற்கு விரைந்துள்ளார். அப்போது விமான நிலையத்திற்கு வந்து இறங்கியவுடன் மொபைலை ஆன் செய்தவர் கதறி அழுதுள்ளார்.

அதாவது மரணப்படுக்கையில் இருந்த அவரது தாய் இறந்து விட்டதாக சில மணி நேரங்களுக்கு முன்பாக அவருக்கு தகவல் வந்திருக்கிறது. இதனால் தன் தாயை இறுதியாக ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்று ஆசையாக வந்தவர், மிகவும் மனமுடைந்து அழுதுள்ளார். அதன்பிறகு எல்லை அதிகாரிகள் அவரை ஆறுதல் படுத்தியுள்ளனர்.

எனவே தன் தாயின் உடலையாவது காணலாம் என்று வீட்டிற்கு சென்ற அவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது பிரிட்டன் நாட்டின் சிவப்பு பட்டியல் துபாய் இருக்கிறது. எனவே அவர் துபாயிலிருந்து வந்த காரணத்தினால் பத்து நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்த வேண்டும்.

ஆனால் தாயை உயிரோடுதான் பார்க்கமுடியவில்லை, உடலையாவது காணலாம் என்று வந்த  Mary பித்து பிடித்தது போல் ஆகிவிட்டார். மேலும் அவரின் தனிமைப்படுத்துதல் காலம் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று தான் முடியும். அப்போது அவர் வீட்டிற்கு சென்றால் தாயின் இறுதிச்சடங்கில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இறுதிவரை அவரது தாயின் முகத்தை பார்க்கவே முடியாது.

மேலும் தாயினுடைய இறுதிச்சடங்கை மேற்கொள்ள Mary தன் தந்தைக்கு zoom மூலமாக உதவி செய்துவருகிறார். இதில் மற்றொரு சிரமம் என்னவென்றால் அவரது தாயினுடைய இறுதி சடங்கு அன்று மேரியின் வயதான தந்தை பல மைல்கள் தொலைவு பயணம் செய்து வந்து தான் மேரியை இறுதிச்சடங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் Maryயின் தந்தைக்கும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மனைவியின் இறுதி சடங்கு வீட்டில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் மகளை எப்படி அவ்வளவு தொலைவு சென்று அழைத்து வருவார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த Mary தன் நாட்டின் மீது கோபத்தில் இருப்பதாகவும், பிரிட்டனிற்கு திரும்பி வர விருப்பமில்லை என்றும் பிரிட்டன் தங்கள் குடிமக்களிடமே மோசமாக நடந்து கொள்கிறது என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் Mary உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் Rachael Maskell ற்கும் சுகாதார செயலாளர் Matt Hancock மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கும் கருணை அடிப்படையில் தன்னை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இந்த கோரிக்கைக்கு தற்போது வரை பதில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |