வாலிபரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அக்கரை பகுதியில் மணிகண்டன்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் தாயாரை ராமமூர்த்தி(52) என்பவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்கரை பகுதியில் இருக்கும் கோழிக்கடை முன்பு மணிகண்டன் ராமமூர்த்தியை சந்தித்து ஏன் எனது தாயை கேலி செய்தீர்கள்? என தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராமமூர்த்தி மணிகண்டனை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.