Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாயை பார்க்க சென்ற மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

2 மோட்டார் சைக்கிள் மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாத்தமால் என்பவர் மாடு முட்டி அனுமதிக்கப்பட்டார். இவரது மகனான குபேரன் என்பவர் தாயை பார்ப்பதற்காக சிங்கம்புணரி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குபேரனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குபேரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

மேலும் காயமடைந்த ராஜேஷை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குபேரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |