பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நல குறைவின் காரணமாக கடந்த புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 100 வயது ஆகிறது. அதன் பிறகு பிரதமர் மோடியின் தாயார் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி தாய்க்கும் மகனுக்கும் இருக்கும் அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது என்றும் கூறியுள்ளார்.