Categories
மாநில செய்திகள்

தாய்க்கு எமனான மகன்…. உலக்கையால் தாக்கிய கொடூரம்…. இந்த காரணத்துக்காக கொலையா….?

செல்போன் வாங்கித் தராத தாயை மகன் உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜோகுழம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் மகேஷ். இவர்  இடைநிலை படிப்பை முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். மகேஷின் தந்தை நோய்வாய்ப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தாய் விஜயலட்சுமி விவசாய தொழில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஷ் பல நாட்களாக தாயாரிடம் செல்போன் வாங்கி கேட்டுக் கொண்டே இருந்துள்ளார்.

ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தயார் தட்டிக் கழித்துக் கொண்டே சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் தாயாரின் மண்டையில் உலக்கையால் பலமாக தாக்கியுள்ளார். விஜயலட்சுமியின் சத்தம் கேட்டு  குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பலத்த காயம் மற்றும் அதிக ரத்தம் சிந்தியதால் விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |