தாவணகெரே அருகே பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட தம்பதியினர் ஆல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாவணகேரே டவுன் அருகே உள்ள பரத் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சுமா என்ற மனைவியும் துருவா என்ற மகனும் உள்ளனர். சுமா கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அவருடைய கணவர் பல லட்சக்கணக்கில் செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுமா தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கிருஷ்ணமூர்த்தி கடைக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வந்துள்ளார். பின்னர் அதனை மகன் துருவா மற்றும் மனைவி இருவருக்கும் கொடுத்துள்ளார். இதனால் இருவரும் சிறிது நேரத்தில் இறந்துள்ளனர். பின்னர் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.