குழந்தைக்கு தாய் மதுபானம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி வண்ணார்பேட்டை பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவர் இருக்கிறார். இவர் கோவையில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நித்திஷ் (3), நித்தின் (1) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கீதா கார்த்திக்கை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதில் கார்த்திக்கிடம் நித்தீசும், கீதாவிடம் நித்தீனும் வளர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14- ஆம் தேதி திடீரென குழந்தை மயங்கி விழுந்தது. உடனே கீதா குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. கீதாவுக்கு ஏற்கனவே 2 நபர்களுடன் திருமணம் நடந்துள்ளது. இதில் கார்த்திக்கை 3-வது திருமணம் செய்துள்ளார். இதில் கீதாவுக்கு பல பேருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதற்கு குழந்தை இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தைக்கு அளவுக்கதிகமாக சாப்பாட்டை வாயில் திணித்துள்ளார். இதனையடுத்து தாய்ப்பால் கொடுப்பதற்கு பதிலாக குழந்தைகக்கு மதுபானம் கொடுத்துள்ளார். அதன்பிறகு குழந்தை தூங்கும்போது தொட்டிலை வேகமாக சுவற்றில் மோதி குழந்தையை கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் கீதாவை கைது செய்து மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.