உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அச்சுறுத்தி வந்த நிலையில் தடுப்பூசி போட தொடங்கியதால் பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியது. ஆனால் தற்போது அதிலிருந்து வேறுபட்ட ஒமிக்ரான் வைரஸ் மக்களை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண்களும் தாய்மார்களும் பாதிக்கப்படுவதால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது குறித்து உலக சுகாதாரத்துறை சில தகவல்களை தெரிவித்துள்ளது.
அதாவது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு முக கவசம் நிச்சயமாக அணிந்திருக்க வேண்டும். தாய் பால் கொடுக்காத நேரங்களில் குழந்தையிடம் நெருங்காமல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் அவசியம். கருவிலேயே குழந்தைகளுக்கு தொற்று பரவுவதும் தாய்ப்பால் மூலமாக பாதிப்பு ஏற்படுவதும் மிக அரிது தான். இதுவரை தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.