மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுடைய தாய்மாமனிடம் செல்போனில் பேசி வந்துள்ளதனர். இதை அறிந்த அவருடைய தாயார் மற்றும் இளைஞர்கள், ஊர்மக்கள் சேர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அந்த 2 சிறுமிகளையும் கம்புகளை கொண்டு கடுமையாக தாக்கியும், காலால் எட்டி உதைத்தும், முடியை பிடித்து தரதரவென்று இழுத்தல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் பக்கத்த்தில் இருந்த யாரும் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தவில்லை. இந்நிலையில் இது குறித்து காவல்துறையினர் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.