திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி- பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. தனது பிள்ளைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய மெழுகு உருவச் சிலையை செய்து அவருடைய மடியில் குழந்தையை வைத்து காது குத்தப்பட்டது.
அக்கா குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் இஎன்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு. ஆனால் இதை அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்பதினால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக ஐந்து லட்சம் ரூபாய் செலவில் சிலை செய்து குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தி தம்பி பாண்டிதுரையின் ஆசையை நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.