Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தாய்மாமாவுடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள நவலூர் குட்டப்பட்டு பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் தனது தாய்மாமா முருகேசன் என்பவருடன் கரூர் மாவட்டத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளான். நேற்று காலை கார்த்திக் சிறுவர்களுடன் இணைந்து அப்பகுதியிலுள்ள இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளான்.

அப்போது நீச்சல் தெரியாமல் சிறுவன் தண்ணீரில் மூழ்கிவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |