விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நல்லதா நாலு விஷயம் செய்வோம் என்று கூறி அவர் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றார். அதில் பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்று உள்ளார்.
இந்நிலையில் அங்கு முதலைக்கரியை வறுத்து விற்கும் கடையில் முதலை கறி வாங்கி சாப்பிட்டுள்ளார். முதலை உடலில் கறியை எடுத்துவிட்டு எலும்புக்கூடு அந்த கடை முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளன.இதனிடையே முதல் முதலாய் முதலைக்கறி என்று கோபிநாத் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க