Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக போராட்டம் …கலவரத்தில் 13 போலீஸ் உட்பட 33 பேர் காயம் ..!!

தாய்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் தாய்லாந்தில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தாய்லாந்து தலைநகரமான பாங்காங்கில் உள்ள அரண்மனைக்கு வெளியே கடந்த சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான மக்கள் ‘பிரதமர் பதவி விலக வேண்டும்’ ‘மன்னராட்சி சீரமைக்க வேண்டும்’ என்றெல்லாம் கோரிக்கைகளை வைத்து இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் எழுதப்பட்ட பேப்பர் ராக்கெட்களை  அரண்மனைக்குள் வீச  திட்டமிட்டுள்ளதாக கூறினர் .

இதனால் காவல்துறையினர் அவர்களை தடுப்பதற்காக சாலையின்  குறுக்கே கண்டைனர் வைத்து அவர்களை தடுப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அந்த தடுப்புகளையும் மீறி போராடிக் கொண்டிருந்தார்கள். இதனால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகள் போன்றவற்றை போராட்டக்காரர்களை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தினர் .மேலும் இந்த கலவரத்தினால் 13 காவல்துறையினர் உட்பட 33 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தை குறித்து தாய்லாந்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கிஸானா பதனசரோன் போராட்டக்காரர்கள் காவல் துறையினரின் மீது இரும்பு கம்பிகளை எறிந்து தாக்கியதால் தான் போராட்டத்தை கலைப்பதற்காக குண்டு போன்றவற்றை காவல்துறையினர் பயன்படுத்தினர் என்று கூறினார்.

Categories

Tech |