Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பாக விக்கி அளித்த வாக்குறுதி”…. அப்ப 2-வது ஹனிமூன் இருக்கு போல….!!!!!

தாய்லாந்தில் இருந்து கிளம்பும் முன்பாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஹோட்டலுக்கு வாக்குறுதி அளித்ததை பார்த்தால் இரண்டாவது தேனிலவு இருக்கிறது போல என பேச்சு கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு ஊரே பிரமிக்கும் வகையில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். புதுமண தம்பதிகளான இவர்கள் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர்.

அப்போது தங்கியிருந்த ஹோட்டலில் புகைப்படங்களை எடுத்து விக்கி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார். தாய்லாந்திலிருந்து கிளம்பும் முன்பாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த விக்கி, “ஹோட்டலுக்கு நன்றி. இந்த வகையான சூழல் மற்றும் அருமையான உணவுக்காக நாங்கள் திரும்பி வருவோம்” என பகிர்ந்திருந்தார். இவ்வாறு விக்னேஷ் அளித்த வாக்குறுதியை பார்த்தால் இரண்டாவது ஹனிமூன் இருக்கின்றது போல என பேச்சுக்கள் கிளம்பியுள்ளது.

https://www.instagram.com/p/CfO79o6Pa0D/?utm_source=ig_embed&utm_campaign=loading

இந்த நிலையில் நாடு திரும்பியுள்ள நயன்தாராஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகின்ற நிலையில் இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் நயன்தாரா. இத்திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா.

Categories

Tech |