மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய தாய்லாந்து கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவு துறை மந்திரியுமான டான் பிரமுத்வினயை சந்தித்து பேசி உள்ளார். பாங்காக்கில் உள்ள இந்து கோவிலான தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் பாங்காங் தேவஸ்தானத்தில் இன்று காலை பிரார்த்தனை செய்தேன். இது நமது பகிரப்பட்ட மற்றும் மத கலாச்சார பாரம்பரியத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றது என குறிப்பிட்டு இருக்கிறார்.
Categories