Categories
உலக செய்திகள்

“தாய்லாந்தில் தஞ்சம் புகுந்த கோத்தபாய ராஜபக்சே”… அடுத்த வாரம் இலங்கை திரும்புகிறார்…!!!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடும் அவதிக்கு ஆளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக  இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே  காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி கோத்தபாய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடி உள்ளார். அதன் பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து அவரது விசா காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 11 ம் தேதி தாய்லாந்துக்கு சென்றுள்ளார். மேலும் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் தங்கி இருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளேயே இருக்கும்படி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தியிருக்கின்றார்கள். இந்த சூழலில் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்புவார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்கா கூறியுள்ளார். மேலும் கோத்தபாய ராஜபக்சே வருகின்ற 24ஆம் தேதி இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |