தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா பிரதமரானார். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் பிரயுத் சான் ஓச்சா வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கிடையே தாய்லாந்தில் ஒருவர் தொடர்ந்து 8 ஆண்டுகள் மட்டும் பிரதமராக இருக்க முடியும் என்று அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது.
அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியின் மூலம் பிரதமரான பிரயுத் சான் ஓச்சாவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்துவிட்டது எனவும் அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் அரசியலமைப்பு கோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு கோர்ட் பிரயுத் சான் ஓச்சாவே பிரதமர் பதவியிலிருந்து இடைக்கால நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த அரசியலமைப்பின் கோர்ட்டின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு பிரயுத் சான் ஓச்சா பிரதம பதவியிலிருந்து தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் பொது தேர்தல் வரை பிரயுத் சான் ஓச்சா பிரதமர் பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.