Categories
சினிமா தமிழ் சினிமா

“தாய்லாந்து விமானத்தில் தமிழ் அங்கிள்ஸ் செய்த அட்டூழியம்”….. ட்விட் செய்த பிக்பாஸ் பிரபலம்…!!!!!!

தாய்லாந்து விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடுத்தர வயது ஆண்கள் செய்த அட்டகாசத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வைஷ்ணவி பகிர்ந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கமல்தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் வைஷ்ணவி. இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இவர் அண்மையில் தனது காதல் கணவரை பிரிந்தது குறித்து ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

இந்த நிலையில் தாய்லாந்து விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடுத்தர வயது தமிழ் அங்கிள்ஸ் தங்கள் மனைவிகளை விட்டுவிட்டு பாங்காக்கிற்கு நண்பர்களுடன் சந்தோஷமாக மது அருந்திவிட்டு விமானத்தில் வந்தார்கள். அவர்கள் டிக்கெட் வாங்கி விட்டு ஏதோ விமானத்திற்கு சொந்தக்காரர்கள் போல் செய்தார்கள். மேலும் அந்த தாய்லாந்து ஏர்வேஸ் கேபின் க்ரூவை மோசமாக நடத்தினார்கள். இதை வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்தவர்கள் பாங்காங் மட்டுமல்ல துபாய் விமானங்களையும் இந்த அட்டூழியம் தாங்க முடியவில்லை. நாங்கள் அமைதியாக இருக்கின்றோம். நீங்கள் வெளிப்படையாக கூறுகின்றீர்கள் என நெட்டிசன்கள் கூறுகின்றார்கள்.

Categories

Tech |