Categories
தேசிய செய்திகள்

தாய் இன்றி தவித்த 8 மாத குழந்தை…. சிறையிலிருந்த தாய்க்கு பிணை வழங்கிய நீதிமன்றம்…!!

உடல்நிலை சரியில்லாத 8 மாத குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக சிறையில் இருந்த கைதிக்கு பிணை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒரு பெண் கடந்த 29ஆம் தேதி சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்துள்ளார். இதன் காரணமாக அவருடன் சேர்த்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தாய் சிறைக்கு சென்ற காரணத்தினால் அவரின் 8 மாத குழந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிற்கு பிணை வழங்கி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் கிளை உத்தரவிட்டது. இது குறித்து வழக்கறிஞர் கூறுகையில் தாயின் பிரிவை தாங்க முடியாத காரணத்தினாலும், தாய்பால் கிடைக்காததால் குழந்தையின் உடல் நிலை மிக மோசம் அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழந்தையை தாயுடன் சிறையில் வைத்திருக்க முடியாது என்பதால் பிணை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |