Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாய் இறந்த செய்தியை மறைத்த தந்தை”… தேர்வு எழுதிவிட்டு வந்த இரண்டு மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

தாய் இறந்த செய்தியை மகளிடம் மறைத்து தேர்வு எழுதிய பின்னர் கூறியுள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் காந்தி நகரை சார்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி முத்துமாரி. இத்தம்பதியினருக்கு வாணிஸ்ரீ, கலாராணி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரி விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

நேற்று இரண்டு மகள்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்ததால் பெரியசாமி மகள்களிடம் தாய் இறந்ததை சொல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கவைத்தார். முத்துக்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் நேற்று மதியம் ஒரு மணி அளவில் உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு எழுதிய இரண்டு மகள்களையும் நேரடியாக மயானத்திற்கு அழைத்து வந்து தாய் இறந்த செய்தியை கூறியுள்ளார். இதைக் கேட்ட இரண்டு மகள்களும் கதறி கதறி அழுத சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |