Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. நடுவீட்டில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தாய் இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொங்காளியூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிவகுமாரின் தயாரான காளியாத்தாள் என்பவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு இறந்துவிட்டார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த சிவகுமார் நடு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மது குடித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த குடும்பத்தினர் சிவகுமார் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |